Awas Gejolak Sosial 1200x798666 2 scaled
செய்திகள்இலங்கை

நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்!

Share

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில் நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளை முதல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகளாக

  • வீட்டிலிருந்து தொழில், மருத்துவமனை தேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • வீடுகளில் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களும் எதிர்வரும் ஒக்ரோபர் 31 வரை அனுமதி வழங்கப்படமாட்டாது.

  • ஒன்றுகூடல்களுக்கு தொடர்ந்து தடைவிதிப்பு

  • பதிவுத் திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதன்போத 10 பேருக்கு மாத்திரமே குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள அனுமதி

  • எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின் திருமண மண்டபங்களில் 50 பேருக்கு மேற்படாது மண்டப கொள்ளளவில் 25 சதவீதமானோரை உள்ளடக்கி திருமண வைபவங்கள் நடத்த பரிந்துரை

  • எனினும் இந்தத் திருமண நிகழ்வுகளில் மதுபான உபசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • மரணச் சடங்கில் கலந்து கொள்ள ஒரே தடவையில் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி

  • எதிர்வரும் 16 ஆம் திகதிக்குப் பின் மரண நிகழ்வு கலந்து கொள்ள 15 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

  • சமய ஸ்தலங்கள், கூட்டுவழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு.

  • பாடசாலைகள் 200 இற்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் முதற்கட்டமாக திறக்க முடியும்.

  • பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டலுக்கமைய ஆரம்பிக்கலாம்.

  • அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களும் தினமும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை அனுமதிக்கப்படமாட்டது.

  • பொதுப் போக்குவரத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி

  • முன்பள்ளிகளை 50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

  • பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...