செய்திகள்
ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு!


ஆப்கானிஸ்தானில் ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முடி திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
Helmand மாகாணத்திலுள்ள முடி திருத்தும் பணியாளர்களுக்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முகச்சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறும் செயல் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தடையை மீறுவோருக்கு தண்டனை விதிக்கப்படுமென தலிபான் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் காபூலிலுள்ள முடி திருத்தும் பணியாளர்கள், இதுபோன்ற உத்தரவு தமக்கும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.