செய்திகள்
அல்வாயில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – வீடுகள் தீக்கிரை
Published
2 வருடங்கள் agoon
By
Thaaraga

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசத்தில் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுதோடு மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன .
இந்த சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவினை சேர்ந்த “வெட்டுகுமார்” என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள ஏனையோரை தேடும் பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இம்மாதம் 2 ஆம் திகதி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தினும் மதுபோதையில் நுழைந்த வெட்டுக்குமார், அவரது கூட்டாளிகள் அப்பகுதியிலுள்ள வீடுகளினுள் புகுந்து பொருட்களை அடித்துநொறுக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்,
இதனால் 6 குடும்பங்கள் வீட்டிலிருந்து வெளியேறி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த குழுவினர் நேற்று முன்தினம் (25) மீண்டும் இரு வீடுகளுக்கு பெற்றோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளதோடு அந்தப்பகுதியிலுள்ள மேலும் சில வீட்டு ஜன்னல்களை உடைத்தும், சொத்துக்கள் மற்றும் உடமைகள் என்பவற்றுக்கு நெருப்பு வைத்தும் அவற்றை தீக்கிரையாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வெட்டுக்குமார் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவனது சகோதரனான ஜெயா உட்பட சிலர் தலைமறைவாகியுள்ளனர்.
இந்நிலையில் தாம் தினமும் பயத்துடனே வாழ்வதாக அல்வாய் வடக்கு மகாத்மா கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
You may like
ஒஸ்மானியாக் கல்லூரி மோதல் விவகாரம் – பொலீஸ் நடவடிக்கைக்கு உட்படுத்தி விசாரிக்க தீர்மானம்!
வறிய மாணவர்களுக்கான நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு!
சர்வதேச முன்னணி வங்கி உயரதிகாரிகள் யாழ்பல்கலைக்கு விஜயம்!
யாழ் பல்கலையில் மூலதனச்சந்தை புதிர் போட்டி!
யாழில் வீதியோர விழிப்புணர்வு செயற்றிட்டம்!
படகின் சுக்கான் உடைந்த நிலையில் கடலில் பயணிகள் அந்தரிப்பு!
யாழ் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் திறந்துவைப்பு!
பழுதடைந்த உணவு விற்ற உணவகத்திற்கு சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல்!
தையிட்டியில் கஜேந்திரனை வலுக்கட்டாயமாக தூக்கி அப்புறப்படுத்திய பொலிஸாரின் அராஜகம்!

















