தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பாக நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பாக இன்று(27) காலை தென்காசியை சேர்ந்த வெற்றி வேல் என்பவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
இதனை கண்ட பொலிஸார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Leave a comment