pearl one news private hospital
செய்திகள்இலங்கை

வைத்தியசாலையில் வைத்த கைக்குண்டு அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது! – சந்தேகநபர் தெரிவிப்பு

Share

வைத்தியசாலையில் வைத்த கைக்குண்டு அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது! – சந்தேகநபர் தெரிவிப்பு

நாரஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட கைக்குண்டு, அமைச்சர் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என அறியப்பட்டுள்ளது

கொழும்பில் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் இலாச்சியில் இருந்தே இந்த கைக்குண்டு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

கைக்குண்டு மீட்கப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவலில் வைக்கப்பட்டுள்ள திருகோணமலை உப்புவேலி பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர்களால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டட நிர்மாணப் பணியாற்றும் சந்தேகநபர், மூன்று மாதங்களுக்கு முன்னர், திருத்தப்பணிகளுக்காக அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு சென்ற வேளையில் அங்கிருந்த மேசை இலாச்சியிலிருந்து கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை எடுத்துள்ளார்.

கைக்குண்டை இவர் வைத்துக்கொண்டதோடு தோட்டாக்களை அவருடன் இருந்த மற்றுமொருவர் எடுத்துள்ளார்.

தோட்டக்களை எடுத்தவர் வசிக்கும் மஹவ மற்றும் வெலிக்கந்த பிரதேசங்களுக்கு விசேட விசாரணைப்பிரிவினர் நேற்று (16) சென்று அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.

கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டிலே தற்போது அமைச்சர் தற்போது வசித்துவருகின்றார். எனினும், அமைச்சர் அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு தருவதற்கு முன்னரே தான் கைக்குண்டு மற்றும் ​தோட்டக்களை எடுத்துள்ளார் என சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6903096ee28d6
உலகம்செய்திகள்

அணு ஆயுத சோதனை களத்தில் அமெரிக்கா: ட்ரம்பின் அதிரடி முடிவு உலகிற்கு எச்சரிக்கை

அமெரிக்க அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அநாட்டு இராணுவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

images 4 3
இலங்கைசெய்திகள்

கடலில் மிதந்துவந்த திரவம் 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த ஒரு போத்தலில் (புட்டியில்) இருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த...

25 6902f64dd2465
இலங்கைசெய்திகள்

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு: பொலிஸ் தீவிர விசாரணை

  இலங்கையின் மட்டக்குளி மற்றும் பமுனுகம காவல் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத...

25 6902e1df2434d
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் விவகாரம்: மருத்துவ அறிக்கைகள் மீது நீதிமன்றில் சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு தமனி அடைப்பு...