செய்திகள்
துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்
துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம்
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை தன் முன்பு மண்டியிடச்செய்துள்ளார். அதேநேரம் துப்பாக்கியை காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரின் இந்த செயலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.
கைதிகள் தொடர்பான விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அமைச்சரே, அவர்களைக் கொல்வேன் என அச்சுறுத்துவது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.
ஐ நா மனித உரிமைகள் பேரவையின் பார்வை இலங்கையில் இருக்கும் நிலையில்கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
இந்த சம்பவத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லாவிட்டாதால் தமிழர்களின் நிலைமை மிக மோசமாக மாறும். இவ் விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை குறித்த இணை நாடுகளிடம் வலியுறுத்துகிறேன் – என்றார்.
You must be logged in to post a comment Login