கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார்.
கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதி் வழங்கப்பட்டது
Leave a comment