செய்திகள்இலங்கை

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!

Share
202105010125453755 Death at bday party Victims sister among five of family SECVPF
Share

புத்தளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் மன்னார் சிலாவத்துறை சவேரியார்புரம் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் வத்தளங்குன்று பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ராமையா ஜேசுதாசன் என்ற மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது சடலம் ஒன்று கடலில் மிதப்பதை அவதானித்த நிலையில் சிலாவத்துறை கடற்படையினருக்கு தகவல் வழங்கினர்.

கடற்படையினர் மீனவர்களின் உதவியுடன் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் குறித்த சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி குறித்த மீனவர் புத்தளம் கடற்பரப்பிலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளளார் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...