செய்திகள்
அனுமதி இன்றி பரிசோதனை – ஆராய பணிப்பு !
சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாது பி.சி.ஆர், மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக ஆராயுமாறு பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்ற பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளை பதிவுசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தங்கள் மருத்துவமணைகளில் பரிசோதனைகளின் பின்னர் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் தொடர்பான தகவல்களை குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிராந்திய விசேட தொற்றுநோய் நிபுணர் ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும்,
தனியார் மருத்துவமனைகளில் கொவிட் பரிசோதனை மேற்கொள்பவர்கள், தொற்று உறுதியான பின்பு மருத்துவ ஆலோசனையின்றி செயற்படுவதால் மரணத்தை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது.
இதனாலேயே வீடுகளில் நிகழ்கின்ற கொரோனாத் தொற்றாளர்களின் மரண எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது .
இதேவேளை, பி.சி.ஆர். மற்றும் அன்ரிஜென் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிப்பு தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது – என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
You must be logged in to post a comment Login