manivannan
செய்திகள்இலங்கை

கொரோனா தகனம் – யாழ். மாநகர முதல்வர் விசேட அறிவித்தல்!!

Share

கொரோனா தகனம் – யாழ். மாநகர முதல்வர் விசேட அறிவித்தல்!!

‘கொவிட் தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ். மாநகர சபையால் 6 ஆயிரத்து 500 ரூபா கட்டணம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் எவராவது தனிப்பட்டமுறையில் என்னை தொடர்புகொண்டால் அவர்களுக்கு என்னால் உதவ முடியும்’ என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர ஆளுகைக்குள் உள்ள மின்மயான தகனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொற்றுக்கு உள்ளாகி மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தை பொறுத்தவரையில் கொவிட் தொற்றால் மரணிப்பவர்கள் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் அமைந்துள்ள மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மயானம் யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது.

குறித்த மயானத்தில் நாளொன்றுக்கு 5 உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை சடலங்களை எரிப்பதற்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அதிகளவிலான சடலங்கள் தேங்கி காணப்படுகின்றன.

நாளொன்றுக்கு அதிகளவிலான சடலங்களை எரியூட்டுவதற்கான தகமை எம்மிடம் இல்லை. அதையும் மீறி நாங்கள் ஒன்று இரண்டு சடலங்களை கூடுதலாக எரியூட்டும்போது குறித்த எரியூட்டி அடிக்கடி பழுதடையக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

எனவே எரியூட்டும் தகைமையை அதிரித்து எமக்கு என்னுமொரு எரியூட்டியை வழங்குமாறு நாம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். குறித்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் நாளொன்றுக்கு அதிகளவான சடலங்களை எம்மால் எரியூட்டமுடியும்.

எங்களுக்கு எரியூட்டி வழங்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை வேறு ஒரு மாயனத்துக்காவது வழங்குங்கள். ஏனெனில் யாழ். மாவட்டத்தில் கொவிட் தொற்றால் மரணிப்பவர்களை தகனம்செய்ய தற்பொழுது ஒரே ஒரு இடம்தான் உள்ளது. இப்போதுள்ள நிலமையில் இது போதாது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அனுதாபப் பிரேரணைகள் இன்று இடம்பெறுகிறது!

சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய (அக்டோபர் 24, 2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள்...

25 68fa9219d9e29 1
செய்திகள்உலகம்

ஜெர்மனியில் குழப்பம்: ராணுவப் பயிற்சி குறித்த தகவல் இல்லாததால், ராணுவ வீரரை சுட்டுக் காயப்படுத்திய காவல்துறை!

ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள மியூனிக் நகரில், பொதுமக்கள் முகமூடி அணிந்த சிலர் கட்டிடங்களுக்குள் சென்று...

25 68fac88cc2a44
செய்திகள்இலங்கை

2026 பட்ஜெட் உரைக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு விசேட பாதுகாப்பு பரிசோதனை!

அடுத்த ஆண்டுக்கான (2026) பட்ஜெட் உரைக்கு முன்னதாக, அடுத்த மாதம் (நவம்பர்) மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற...

25 67be1398d1cd3 770x470 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா தப்பிச் சென்ற படகை செலுத்திய யாழ் இளைஞன் அதிரடி கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட...