euro
செய்திகள்உலகம்

ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!

Share

ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!

கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.

பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகே மூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பிய வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை அந்த நாடு அறிவித்திருக்கிறது. அந்த ஏழு மூதாளர்களும் முழுமையாகத் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் ஆவர்.

கொலம்பியாவில் தோன்றிய இந்த வைரஸ் முதலில் அமெரிக்காவிலும் ஏனைய சில தென்னமெரிக்க நாடுகளிலும் தொற்றி இருந்தது. தற்சமயம் அது ஐரோப்பாவில் பரவத் தொடங்கியுள்ளது. பிரான்ஸின் வட பிராந்தியமான Hauts-de-France பகுதியில் கொலம்பிய வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பிராந்தியம் ஏற்கனவே டெல்ரா தொற்றுக்களில் முன்னணியில் உள்ளது. பிரான்ஸில் இதுவரை 56 பேருக்குக் கொலம்பியாத் திரிபு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என சுகாதார சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

உலகில் சுமார் 36 நாடுகளில் பரவியுள்ள கொலம்பியா திரிபுக்கு (Colombian variant) உலக சுகாதார நிறுவனம் இன்னமும் முறைப்படி கிரேக்க இலக்க பெயரைச் சூட்டவில்லை. B.1.621 என்னும் அறிவியல் குறியீட்டுப் பெயருடன் உள்ள அந்த வைரஸ் திரிபு தடுப்பூசிகளை எதிர்க்கக் கூடிய வல்லமை கொண்டதாக இருக்க
லாம் என்ற அச்சம் உள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் போர் தற்போது வேறு களங்களுக்கு – அதாவது புதிய திரிபுகளுக்கு எதிரான சண்டையாக – மாறிவிட்டது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி ஏற்றியவர்கள் தொடர்ந்து தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

உலக மக்கள் மத்தியில் புதிய வைரஸ் திரிபுகள் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்ரா பிறழ்வு புதியதொரு தொற்று நோய் போன்று உலகை ஆட்டிப்படைத்து வருகின்றது.

வெவ்வேறு நாடுகளில் அடையாளம் காணப்பட்ட மேலும் புதிய பல திரிபுகள் பலநாடுகளுக்கும் பரவியுள்ளன. டெல்ரா போன்று கொலம்பியா வைரஸ் உலகத் தொற்று நோயாகப் பரவிவிடலாம் என்று அச்சத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...