வழிகாட்டலை மீறிய பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து!
கொவிட் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை மீறிய 68 பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையில் பயணித்த 50 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களும், மாகாணங்களுக்குள் பயணிக்கும் 18 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களுமே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்களின் வீதி அனுமதிப்பத்திரங்களே ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment