பஸ்ஸில் பயணித்தவர் இருக்கையிலேயே உயிரிழப்பு!!
பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் இருக்கையில் இருந்த நிலையில் இன்று மாலை
உயிரிழந்துள்ளார்.
ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் 60 வயது மதிக்கத்தக்கவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் நித்திரை செய்கிறார் என நினைத்து பஸ் நடத்துநர் அந்தப் பெண்ணை எழுப்பிய போது, அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதையடுத்து அந்தப் பெணின் உடல் பாணந்துறை மருத்துவமனைக்கு பஸ் மூலமே எடுத்து செல்லப்பட்டு, மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment