நாட்டில் மேலும் 192 பேர் நேற்றையதினம் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில், 109 ஆண்களும் 83 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 156 பேர் உயிரிழந்துள்ளனர். 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 36 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 775 பேராக உயர்வடைந்துள்ளது.
Leave a comment