சர்வதேச அளவில் இலங்கை பெண்ணிற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

24 6604bc8440f26

சர்வதேச அளவில் இலங்கை பெண்ணிற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!

2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருதை “ஐயோ சாமி” என்ற பாடல் பெற்றுக் கொண்டது.

சென்னையில் நடைபெற்ற 16 வது எடிசன் விருது வழங்கும் விழாவில், இந்த பாடலை பாடிய வின்டி குணதிலகவுக்கு 2023 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா, சர்வதேச திரைப்பட பாடல்களை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்றது.

இதன்போது பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இசை அமைத்த சனுக விக்ரமசிங்க ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த பாடலை பாடிய வின்டி குணதிலக்க நாடு திரும்பிய போது அவரை வரவேற்க ஏராளமான மக்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த வின்டி குணதிலக்க, “சர்வதேச விருதை நான் பெறுவது இதுவே முதல் முறை. இலங்கைக்கு சர்வதேச விருது ஒன்றை பெற்றுக்கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version