151 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி!
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து அணியை 120 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து, 151 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ் (4),பும்ரா (3), இஷாந்த் ஷர்மா (2), ஷமி (1) என இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
60 ஓவர்களில் 272 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்துக்கு அணிக்கு நிர்ணயித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1 – 0 என முன்னிலை வகிக்கின்றது. இந்த தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment