26 6980895903656
செய்திகள்இலங்கைபிராந்தியம்

12 ஆண்டுகால நீதிப் போராட்டம்: புதுக்குடியிருப்பு இளைஞன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை!

Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – குரவில் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், பிரதான குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் இன்று (02) அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு மாசி (பெப்ரவரி) மாதம் 11-ஆம் திகதி.உடையார்கட்டு குரவில் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழா நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது.

இதன்போது, அதே இடத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் றஜீபன் (19 வயது) என்பவர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தார். முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிரான வழக்கு, ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணைகள் இன்று நிறைவடைந்தன.

கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று பகல் 12 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

மரண தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டன.அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று மௌனம் காக்க, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

 

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...