நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட மதிப்பீட்டில் இந்த விடயம் தெரியவந்துள்ளது என என அவர் சுட்டிக்காட்டினார்.
” 20 தொடக்கம் 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 7 லட்சத்து 19 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை.
அத்துடன், 30 தொடக்கம் 60 வயதுக்கிடைப்பட்டவர்களில் 03 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 64 ஆயிரத்து 234 பேர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அரசினால் முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசியேற்றல் வேலைத்திட்டம், கிராமிய மட்டத்திலும் செயற்படுத்தப்பட்டுவரும் நிலையில் சிலர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment