லிட்ராே எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்!!
லிட்ராே எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதன்படி லாப் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ராே எரிவாயு 12.5 கிலாே கிராம் சிலிண்டர் 363 ரூபாவினாலும் 5 கிலாே கிராம் கொண்ட சிலிண்டரின் விலையை 145 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இன்னும் சில தினங்களில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment