d84d71cd aacf3765 c2da1cea c43eb1b3 a7fc0e8d d4314605
செய்திகள்இலங்கை

மிக விரைவில் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி!!

Share

மிக விரைவில் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி!!

கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாத் தொற்று நிலைமையிலும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை ஈடுபடுத்தி, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

இம்முறை ஒரு லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன என ஆணைக்குழுவின் உப தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...