நேற்று மட்டும் 4,282 தொற்றாளர்கள் அடையாளம்!
நாட்டில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 282 கொரோனாத் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்ட பின்னர் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.
அதேவேளை, தற்போது நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை, நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போதுவரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 978 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
Leave a comment