ranil wickremesinghe at parliament
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டில் மின்சார தடை ஏற்படும் ! – முன்னாள் பிரதமர்.

Share

போதிய நிதி இல்லை என்றால் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது. எரிபொருளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றால் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (29) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து  கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர், அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் உணவுப் பொருள் தட்டுபாடு போல, எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும்.

கடந்த வெள்ளிக்கிழமை வரையில் அந்நிய செலாவணியாக நாட்டில் காணப்பட்ட டொலர்கள், தங்க நகைகளின் பெறுமதிகளை டொலர்களில் சர்வதேச நாணய நிதியத்துக்கு இலங்கை மத்திய வங்கி அனுப்பியிருக்கும்.

இந்தத் தகவல்களை சபாநாயகர் அல்லது இராஜாங்க அமைச்சர்கள் அந்த வங்கியிடமிருந்து பெற்று சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இதன்போது குறுக்கீடு செய்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் ஏற்பட்டிருக்கும் அந்நிய செலாவணி தட்டுப்பாட்டால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, நாட்டில் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தன என்றார்.

எனினும் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், இதனால் எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...