தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு!
நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று திங்கட்கிழமை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள இந்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வார இறுதிநாள்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஊரடங்கு அமுல்படுத்தலை ஒரு மாத காலத்துக்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. நாட்டை உடனடியாக முடக்குமாறு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே நாட்டை முழுமையாக முடக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.