தேவையானோரை மட்டும் பணிக்கு அழைக்கவும்- சவேந்திர சில்வா அறிவிப்பு!!
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சில நிறுவனங்கள் அதிக ஊழியர்களை அழைக்கின்றன என்று தகவல்கள் தமக்குக் கிடைக்கின்றன எனவும் கூறினார்.
தற்போதைய இக்கட்டான காலக்கட்டத்தில் விருந்துபசாரங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இந்த நேரத்தில் நாட்டை மூடுவது பற்றி நாம் பேசக்கூடாது எனத் தெரிவித்த அவர், நாடு மூடப்படாத வகையில் வேலைசெய்வது அனைத்து குடிமக்களினதும் பொறுப்பாகும் என்றார்.
நாட்டை மூட வேண்டாம் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment