திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு!

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்

திருமணத்துக்காக இத்தாலியிலிருந்து வந்த இளைஞன் கொவிட்டால் சாவு!

திருமணத்துக்காக இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இளைஞர் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டு வடக்கு, கோனவில, கிராகல பிரதேசத்தைச் சேர்ந்த இத்தாலியின் மொன்சோ நகரில் தொழில் செய்யும் 27 வயதான இந்த இளைஞனுக்கு இந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்காக அவர் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் இலங்கை வந்தார்.

இலங்கைக்கு வந்த இளைஞனுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவரது தாயும் இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார் என்று சுகாதாரத் தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மகனும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை அந்தப் பிரதேசத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version