தச்சராக மாறிய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர்!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சேவியர் டோஹர்டி கிரிக்கெட்டிலிருந்து
ஓய்வுபெற்ற பின்னர் தச்சராக மாறியிருக்கிறார்.
சிலர் ஓய்வு பெற்ற பின்னர் வர்ணனையாளராகவோ, பயிற்சியாளராகவோ அது தொடர்பான விவாதங்களில் ஈடுபடுபவர்களாகவோ மாறுவது வழக்கம்.
சிலர் கிரிக்கெட்டை அப்படியே விட்டு விட்டு, இசைக் கலைஞர்களாக, நடிகர்களாக மாறியிருக்கின்றனர்.
அந்த வழியிலேயே தச்சராக மாறியிருக்கிறார் சேவியர் டோஹர்டி.
இவர், 2015 ஆம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்று ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தவர்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள், 60 ஒரு நாள் போட்டிகள், 11 ரி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
2010 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இணைந்த சேவியர், 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
2017 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற இவர், தச்சராக முடிவு செய்தார். ஆனால், அதுபற்றி அவருக்கு ஏதும் தெரியாது. பிறகு அதை முழுமையாகக் கற்றுக்கொண்டு இப்போது அந்தத் தொழிலில் இறங்கிவிட்டார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் என்ன செய்ய போகிறேன் என்பது தெரியாமல் இருந்தேன். இப்போது இந்த தொழிலை ரசித்து செய்கிறேன். இது எனக்கு பிடித்திருக்கிறது.
புதிதாக கற்றுக்கொள்ள முடிகிறது என்று கூறியிருக்கிறார் சேவிய டோஹர்டி.
Leave a comment