செஞ்சோலை சிறுவர் இல்ல தாக்குதல்: 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!
செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலின்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கட்சியின் வல்வெட்டித்துறையில் உள்ள அலுவலகத்துக்கு முன்பாக அதன் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலை குறிக்கும் பதாகை முன்பாக சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பான தகவல் கிடைத்து அவ்விடத்துக்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் நினைவேந்தலை செய்யவிடாது இடையூறு ஏற்படுத்தினர்.
இதனையும் மீறி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலுதவி மருத்துவ பயிற்சிக்காக பாடசாலை மாணவிகள் தங்கியிருந்த போது கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 54 மாணவிகள் உள்ளிட்ட 60க்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment