கொவிட் தொற்றால் மேலும் 186 பேர் உயிரிழப்பு!!
நாட்டில் கொரோனாத் தொற்றால் நேற்று 186 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகூடிய கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கையுடன் இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக உயர்வடைந்துள்ளது.
Leave a comment