கொழும்புக்குள் வராதீர்கள் – மாநகர மேயர் கோரிக்கை
அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் கொழும்பு நகரத்துக்குள் பிரவேசிக்காதீர்கள். இவ்வாறு ஏனைய மாகாணங்களில் உள்ள மக்களுக்கு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் கொரோனாத் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. வர்த்தக நிலையங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
கொரோனவால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. மக்கள் இயன்றளவு வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து, வீடுகளிலேயே இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Leave a comment