கொரொனா அச்சுறுத்தல் – ரயில் நிலையங்களுக்கு பூட்டு!!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் வடக்கு களுத்துறை ரயில் நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
தற்போது, ரயில் சேவை துணைத்துறையின் கீழ் உள்ள ஊழியர்களில் 102 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் 38 பேர் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், 12 கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 52 ஊழியர்கள் அடங்குகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Leave a comment