கடற்படையினருக்காக எதிராக மக்கள் போராட்டம் (படங்கள்)

மாதகலில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (01) போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (01) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் மாதகல் காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

Mathakal 01

நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும்,காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே போன்ற பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டது.

போராட்டம் இடம்பெற்ற அப்பகுதியில் பொலிசாரும் இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

#SrilankaNews

Exit mobile version