Hemantha Herath 1
செய்திகள்இலங்கை

ஒட்சிசனை இறக்குமதி செய்யும் இலங்கை அரசு!!

Share

ஒட்சிசனை இறக்குமதி செய்யும் இலங்கை அரசு!!

கொரோனாத் தொற்றாளர்களுக்குத் தேவையான மருத்துவ ஒட்சிசன் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தயாரிக்கப்படும் ஒட்சிசன் வசதிகள், கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் ஒட்சிசன் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஒட்சிசனை இறக்குமதி செய்வதில் வரம்புகள் இருக்கும், வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் திடீரென இறக்குமதியை நிறுத்தலாம். இதனால், ஒட்சிசனை தயாரிக்கும் இயந்திரங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாற்று வழிகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 5
செய்திகள்உலகம்

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர் யார்? டெல்லியில் மூத்த மதத்தலைவர் விளக்கம்!

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த வாரம் அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழித்...

04 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையின் அனைத்து காணிகளும் டிஜிட்டல் முறைக்கு: காணி நிர்வாகத்தில் புதிய புரட்சி!

இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் முறையாக வரைபடமாக்கி (Mapping), டிஜிட்டல் மயப்படுத்தும் விசேட...

05 5
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையின் சில பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்: ‘எச்சரிக்கை மட்டம்’ வரை உயரும் என அறிவுறுத்தல்!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (06) வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை...

08 5
செய்திகள்அரசியல்இலங்கை

ஈரானியக் கப்பல் பணியாளர்களைப் பாதுகாப்பாக மீட்டது இலங்கை: திருகோணமலைக்கு மாற்றப்படவுள்ள ‘IRIS Bushehr’

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள 208 பணியாளர்களைப்...