richar 1
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் – ரிஷாத் மறியல் நீடிப்பு!!

Share

ஈஸ்டர் தாக்குதல் – ரிஷாத் மறியல் நீடிப்பு!!

2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்  தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இன்று காலை இந்த உத்தரவை பிறப்பித்தார்.

செப்டம்பர் 1 ஆம் திகதி வரை அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்ட வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் உரிமையாளருடன், ரிஷாத் பதியுதீன் தொடர்புகொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்  காரணமாக ரிஷாத் பதியுதீன் கைதானமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...