Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

Share

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் (Beijing Capital Airlines) நிறுவனம் தனது நேரடி விமானச் சேவையை இன்று (31) அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட A-330 எயார்பஸ் ரக விமானம் (விமான இலக்கம்: JD-487), இன்று பிற்பகல் 01.46 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

கன்னிப் பயணமாக வந்தடைந்த இந்த விமானத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி நீர்த்தாரை (Water Salute) மரியாதை வழங்கி உற்சாக வரவேற்பளித்தனர்.இந்த முதல் விமானத்தில் 170 பயணிகள் மற்றும் 13 ஊழியர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.

இந்த விமானச் சேவையானது வாரத்திற்கு இருமுறை (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை) தலா 8 மணித்தியாலப் பயணக் காலத்துடன் இயங்கும்:

கட்டுநாயக்க வருகை: பி.ப. 02.20 மணி
மீளப் புறப்படும் நேரம்: பி.ப. 04.20 மணி

இந்த புதிய விமானச் சேவையின் மூலம் சீனச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...