mah
செய்திகள்இலங்கை

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த உரையாடல்

Share

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த உரையாடல்

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இந்தத் தகவலை பிரதமர் மஹிந்த தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானில் 2001 – 2014 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர். அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியுடன் பேசிய பிரதமர் மஹிந்த, ஆப்கானிஸ்தானின் நிலைமைகள் தொடர்பில் விசாரித்ததுடன், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இலங்கை தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...