இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு.
தில் ராஜு தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது வாரிசு.
படத்தில் தளபதிக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது வாரிசு. படத்தின் அப்டேட்டுகள் நாளுக்குநாள் வெளியாகி ரசிகர்களிடத்தே எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ் ராஜின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ள பிரகாஷ் ராஜிடம், வாரிசு படத்தில் உங்கள் காதாபாத்திரம் என்ன என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு “செல்லத்தோட வேலை பார்த்து கிட்டத்தட்ட 15 வருடம் ஆகிவிட்டது. இது ஒரு நல்ல படம். கதையை சொல்லனுமா? வேண்டாமா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நானும் செல்லமும் திரும்ப சேர்ந்திருக்கிறோம்” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
#Cinema
Leave a comment