கல்கியின் பொன்னியின் செல்வன் சினிமாவாகப் போகிறது. தமிழின் முதன்மையான இயக்குநர் மணிரத்னம் இயக்கப்போகிறார். இந்தச் செய்தி கொரோனா செய்தியாவதற்கு முன்பே வந்த செய்தி. 2018 இல் மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வெளிவந்த செக்கச் சிவந்த வானம் வெளியான பின் கசியவிடப்பட்ட செய்தி. அதனைத் தொடர்ந்து அவ்வப்போதும் விதம்விதமான செய்திகள் வந்துகொண்டிருந்தன.
இயக்குநர் மணிரத்னத்தின் சினிமா பார்வையென்பது பெரும்பாலும் புத்தாக்கங்கள் அல்ல. மறுவிளக்கம் செய்தவையே. அவரது முதல் வெற்றிப்படமான மௌனராகமும், இன்னொரு வெற்றிப்படமான அலைபாயுதேவும் மட்டுமே நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தை விவாதிக்கும் புனைவுப்படங்கள். மற்றவையெல்லாம் விதம்விதமான மறுவிளக்க முன்வைப்புகளே.
Leave a comment