closeup female foot pain healthcare concept 53476 3243
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

பாதங்களை மென்மையாக்க வேண்டுமா? சில அழகு குறிப்புக்கள் இதோ

Share

பொதுவாக உடலில் நீர்ச்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும் காரணமாக இருக்கலாம்.

இதனால் பாதங்கள் பொலிவிழந்து காணப்படும். இவற்றை மென்மையாக மாற்ற ஒரு சில வழிகள் உள்ளது. தற்போத அதனை பார்ப்போம்.

closeup female foot pain healthcare concept 53476 3243

  • கற்றாழையில் இருக்கும் சதைபகுதியை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் ஒரே மாதத்தில் வெடிப்பு சரியாகிவிடும். உருளைக் கிழங்கு சாற்றினை எடுத்து பாதங்களில் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து குதிகால்கள் அழகு பெறும்.
  • பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.
  • எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகள் தங்காது.
  • கடுகு எண்ணெய்யை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு நீங்கும்.
  • மென்மையான பாதங்களாக திகழும்.
  • தினமும் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய்யை பாதத்தில் தேயுங்கள். சொரசொரப்பான பாதத்திற்கு  இடமிருக்காது.
  • தயிரை பாதங்களில் தடவி, பிரஷினால் வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் உப்பு அல்லது சோடா உப்பை குதிகால்களில் தேய்த்து, கழுவ வேண்டும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வாரம் மூன்று முறை செய்தால் பாதம் மெத்தென்று ஆகும்
  • மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேயுங்கள். 10 நிமிடன்ம் கழித்து பாதத்தை கழுவலாம். இது கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.
  • மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.
    #Beauty Tips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...