GettyImages Kseniya Ovchinnikova
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

கைகளில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புகள்

Share

பொதுவாக முகத்திற்கு மட்டுமன்றி, கை மற்றும் கால்களுக்கும் போதிய பராமரிப்பு கொடுக்க வேண்டும்.

சொல்லப்போனால் முகத்தை விட, கை மற்றும் கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம்.

ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம், முகத்தை விட, கை மற்றும் கால்களில் தான் அதிகம் உள்ளது. இதனால் கை மற்றும் கால்கள் கருப்பாக இருக்கும்.

எனவே இவற்றை எளியமுறையில் ஒரு சில பொருட்கள் கொண்டே சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

GettyImages Kseniya Ovchinnikova

  • பாதாமை இரவில் படுக்கும் போது சிறிது பாலில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.
  • பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.
  • மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.
  • தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.
  • தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.
  • கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

#BeautyTips #Skincare

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...