man wiping his forehead in the hot summer sun
பொழுதுபோக்குமருத்துவம்

உடல் சூட்டை தணிக்க வேண்டுமா? இதோ சில வழிகள்

Share

வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க ஒரு சில வழிகள் உள்ளது.

உடல் அதிகமாக சூடாகிவிட்டால் சில உபாதைகளை சந்திக்க நேரிடம். உதாரணமாக சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சூடு கட்டி, சளி போன்ற பிரச்னைகளை சந்திக்கலாம்.

எனவே இந்த பிரச்சினையிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

  • வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் ஊறவைத்து தலைக்கு குளிக்க வேண்டும். உடலுக்கும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
  • இரவில் சரியான தூக்கம் அவசியம். பித்தம் அதிகரித்தால் உடல் சூடு அதிகரிக்கும்.
  • காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயம் விழுங்கி வந்தால் உடல் சூட்டை எளிதாக தணிக்கலாம். வெந்தயம் உடல் சூட்டை தணிப்பதுடன் மலசிக்கல் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகின்றது.
  • தர்ப்பூசணி உடலில் நீர் வறட்சியை போக்க அதிக நீர்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். உடல் வறட்சியை போக்கவும் உடல் உஷ்ணத்தை போக்கவும் தர்ப்பூசணி அற்புதமான பழம்.
  • முலாம் பழம் அதிக குளிர்ச்சியான பழம் என்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
    வெள்ளரி உடல் சூட்டை குறைப்பதுடன் இதில் அதிகம் உள்ள நார்சத்துக்கள் செரிமானத்தையும் எளிதாக்கும்.
  • சிலருக்கு உடல் இயற்கையாகவே உஷ்ணமாக இருக்கும் அவர்கள் வெறும் வயிற்றில் இளநீர் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் புத்துணர்சியாகவும் இருக்கும்.
  • நொங்கில் நீர்சத்துக்கள் மட்டுமல்லாமல் கனிம சத்துக்களும் நிறைந்துள்ளன. நொங்கு உடல் சூட்டை தணிப்பதுடன் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.

    #LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...