நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி பெரு வெற்றி படைத்த திரைப்படம் விக்ரம் வேதா.
புஷ்கர் – காயத்ரி இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றது.
விஜய்சேதுபதி, மாதவன் இருவரின் கதாப்பாத்திரங்களும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றன .
இந்தநிலையில், விக்ரம் வேதா ஹிந்தியில் ரீமேக்காக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
மாதவனின் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிக்கவுள்ளனனர்.
தபோது, இப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.
தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி ஹிந்தியிலும் படத்தையும் இயக்குகிறார்.
Leave a comment