Untitled 1 54 scaled
சினிமாபொழுதுபோக்கு

ரவீந்தர் மீது விஜய் பரபரப்பு புகார்

Share

தயாரிப்பாளராக பலராலும் அறிப்பட்டவர் தான் ரவீந்தர். இவர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர்

இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார். சிலர் வாழ்த்து கூறி இருந்தாலும் பலர் எதிர்மறை விமர்சனக்கருத்தையே முன்வைத்தார்கள். ஆனாலும் இத்தம்பதி அவ்வாறாக விமர்சனங்களுக்கு செவி சாய்க்காது தமது வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரவீந்தர் மீது போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி, நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் எனக் கூறி 20 லட்சம் ரூபாய் பணத்தினை அவரிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அந்தக் குறித்த நபரான விஜய் “என்னிடம் 20 லட்சம் இல்லை 15 லட்சம் தான் இருக்கிறது. அதை தான் இரண்டு தவணையாக அனுப்புவதாக கூறி இருக்கின்றார். பின்னர் முதலில் 10 லட்சமும், அடுத்த நாள் 5 லட்சமுமாக மொத்தம் 15லட்ஷம் பணத்தை ரவீந்தரினுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

இவ்வாறாக விஜய்யிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர், பணத்தை 16 லட்சமாக ஒரே வாரத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக அவரிடம் கூறியுள்ளார். இருப்பினும் ரவீந்தர் குறித்த தவணைக்குள் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் ரவீந்தரிடம் பணம் விஷயமாக கேட்டதற்கு, வங்கி விடுமுறை என்றும், செக் அனுப்பிருக்கேன் என்றும் பல்வேறு விதமான காரணங்களை சொல்லி அமெரிக்க நபர் விஜய்யின் செல்போன் நம்பரை பிளாக் செய்துள்ளார். இதன் பின்னர் விஜய்யின் மனைவி, ரவீந்திரனை தொடர்பு தமக்கு தரவேண்டிய பணத்தை கேட்டபோது, அவரை தகாதவார்த்தையால் பேசி இருக்கிறார்.

இதன் காரணமாக கோபமுற்ற விஜய் ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், மற்றும் அவர் பணம் கேட்டு பேசிய ஆடியோ போன்றவற்றை வைத்து சென்னை கமிஷ்னருக்கு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக ரவீந்தர் கூறுகையில் தான் விஜய்யிடம் இருந்து 15 லட்சம் வாங்கியது உண்மை தான் என்றும், ஆனால் இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டுவருவதற்கு முடியாமல் தான் விஜய் தன்னிடம் கொடுத்து வைத்ததாகவும்,விஜய்யின் உறவினர்கள் வந்தால் தான் செக்கை கொடுத்துவிடுவேன் என்றும் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...