பொழுதுபோக்குசினிமா

என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியோரில் விஜய்யும் ஒருவர்! – பிரியங்கா சோப்ரா புகழாரம்

Share
Share

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா.

இவர் நடிகர் விஜய் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாக்கப்பட்டு வருகின்றன.

உலக அழகி பட்டத்தை வென்ற நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

தற்போது தனது பழைய நினைவுகளை மீட்டுப் பார்த்துள்ள பிரியங்கா சோப்ரா, தனது வாழ்வில் மிகப்பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியோரில் நடிகர் விஜய்யும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

“நான் ஆரம்பத்தில் நடித்த படங்களில் தமிழ் படமான தமிழன் மற்றும், ஹிந்தி படங்களான அண்டாஸ், தி ஹீரோ ஆகிய படங்கள் அன்றைய காலகட்டத்தில் பெரிய படங்கள்.

‘தமிழன்‘ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஏனெனில் எனக்கு தமிழ்மொழி தெரியாது. வசனங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நன்றாக மனப்பாடம் செய்த பிறகே என்னுடைய வரிகளை பேசுவேன்.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் நடிப்பதை பார்த்துக் கொண்டிருப்பேன். அவரின் நடிப்பை பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். என் சினிமா வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியோரில் விஜய்யும் ஒருவர்.

படப்பிடிப்பு தளத்தில் விஜய் அனைவருடனும் பணிவுடன் நடந்துகொள்வார். படப்பிடிப்பு தளத்தின் உள்ளே வந்து விட்டால் படப்பிடிப்பு முடியும் வரை அவர் வெளியே செல்லமாட்டார். அவரின் அந்த குணத்தை நான் இன்று வரை பின்பற்றி வருகிறேன்” – என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்துக்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளத்துடன், பாராட்டுகளையும் பெற்றுள்ளன. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...