தளபதி விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஜய் சேதுபதி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இத் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் உலகளாவிய ரீதியில் மிகப்பெருமளவு பிரபலமானது.
தமிழ் பிரபலங்கள் மட்டுமல்லாது, கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஹிந்தி நடிகர், நடிகைகள் உட்பட பாடலின் மொழி தெரியாதவர்கள் கூட இப் பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வருகின்றன.
இந்த நிலையில். தற்போது இந்த பாடலுக்கு விஜய் சேதுபதி நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஐய் சேதுபதி மேடையில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Leave a comment