Vegetable chapati
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

வெஜிடபிள் சப்பாத்தி

Share

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – அரை டீஸ்பூன்
காய்கறிக்கலவை (பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவை) – ஒரு கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – அரை கப்
இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை அரைத்தது – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை

காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதுகள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

அதனுடன், மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த மாவிலிருந்து, மெல்லிய சப்பாத்திகள் திரட்டி, இரு சப்பாத்திகளுக்கு நடுவே காய்கறி பூரணத்தை பரத்தி, ஓரங்களை ஒட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் இருபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

1 11
செய்திகள்பொழுதுபோக்கு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியின் போது பண்ட் செய்த செயல்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான போட்டியில் ரிசப் பண்ட் நடுவரின் கண்முன்னே பந்தை கோபமாக தூக்கி எறிந்த காணொளி...

25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான...

4 38
செய்திகள்பொழுதுபோக்கு

மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள்...