தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள ’வாரிசு’ திரைப்படம் பொங்கல் முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’வாரிசு’ படத்தின் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
’வாரிசு’ இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி மாலை 4 மணி முதல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற விஜய்யின் டயலாக்குடன் கூடிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
’மாஸ்டர்’ படத்தை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதை அடுத்து இந்த விழாவுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#cinema
Leave a comment