வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வாரிசு.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத் பயணித்துள்ளார்.
அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணம் செய்துள்ளார்.
அப்போது விஜய் உடன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “ஹைதராபாத்திற்கு இவ்வளவு நல்ல விமானம் இதுவரை இருந்ததில்லை. எனக்கு பிடித்த நடிகர் விஜய் எனக்குப் பக்கத்தில்.
ஒரு நல்ல நாள். கூடவே நிறைய அரட்டையும் சிரிப்பும் கொஞ்சம் லூடோவும் மொத்தத்தில் நல்ல விமானப்பயணம்” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
#Varalaxmi #Vijay #Cinema
Leave a comment