உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் டீஸர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாளை உலக நாயகன் தனது தனது பிறந்ததினத்தை கொண்டாடவுள்ளார். இந்த நிலையில் தற்போது அவரது பிறந்தநாள் பரிசாக விக்ரம் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், டீஸர் முழுதும் கமலஹாசனின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன.
படத்தின் டீஸர் வைரலாகி வரும் நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Leave a comment