இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி -66.
இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், சம்யுக்தா, யோகிபாபு என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். தில் ராஜூ தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
படத்தின் அப்டேட்டுக்கள் நாளுக்கு நாள் வெளியாகி ரெண்டாகி வரும் நிலையில், தற்போது தளபதி விஜய்யின் கெட்டப் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் இரண்டு வேடங்களில் இந்த படத்தின் தோன்றுகிறார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மையில், படப்பிடிப்புக்காக தெலுங்கானா சென்ற தளபதி விஜய், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. அந்த புகைப்படங்களில் விஜய் இளமையான தோற்றத்தில் காணப்பட்டார்.
இந்த நிலையில், தளபதி 66’ இல் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ’ஹாய் செல்லம்’ நாங்கள் மீண்டும் திரும்பி விட்டோம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில், விஜய் சற்று வயதான தோற்றத்துடன் காணப்படுகிறார்.
குறித்த இரு புகைப்படங்களையும் வைரலாக்கிவரும் தளபதி ரசிகர்கள், தளபதி -66 இல் விஜய்க்கு இரு வேடங்கள் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
#CinemaNews
Leave a comment