அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா?
மன்சூர் அலிகான் மற்றும் ஏவி ராஜு என அடுத்தடுத்து தன்னை சீண்டி கொண்டிருப்பதால் தனக்கும் ஒரு அரசியல் பின்புலம் வேண்டும் என த்ரிஷா நினைப்பதாகவும் இதனால் அவர் விரைவில் ஒரு அரசியல் கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகியோர் தங்கள் சொத்தை பாதுகாத்துக் கொள்ளவும் தங்கள் மீது அபாண்டமான பழி சுமத்தாமல் இருப்பதற்காகவும் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பாதுகாப்பாக மாறி கொள்வார்கள் என்பது வழக்கமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
அந்த வகையில் த்ரிஷா மீது சமீபத்தில் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து தற்போது அதிமுக முன்னாள் அதிமுக பிரமுகர் ராஜூ என்பவரும் த்ரிஷா குறித்து கேவலமான கருத்தை ஒன்றை தெரிவித்தார். இந்த நிலையில் தன் மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்ட நிலையில் திரையுலகில் இருந்து பெரிய அளவில் ஆதரவு வரவில்லை என்றும், குறிப்பாக முன்னணி நடிகர்கள் யாரும் கொடுக்கவில்லை என்றும் த்ரிஷா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே தான் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அந்த அரசியல் கட்சி தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் த்ரிஷா தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறி வருவதாக தெரிகிறது. ஏற்கனவே சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த காயத்ரி ரகுராம், கௌதமி உள்ளிட்டோர் த்ரிஷாவிடம் அதிமுகவில் சேருமாறு வலியுறுத்தி வருவதாகவும் அனேகமாக த்ரிஷா அதிமுக அல்லது ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து தனக்கு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
நடிகை த்ரிஷா தான் உண்டு, தன்னுடைய நடிப்பு உண்டு என தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவரை தேவையில்லாமல் சீண்டி அரசியலுக்கு வரவழைத்து விடுவார்கள் போல் தெரிகிறது என நெட்டிசன்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவர் அரசியலுக்கு வருவாரா? எந்த கட்சியில் சேருவார்? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- actress trisha
- av raju trisha issue
- Featured
- mansoor about trisha
- mansoor ali khan about trisha
- mansoor ali khan trisha
- mansoor ali khan trisha interview
- mansoor ali khan trisha issue
- mansoor alikhan trisha issue
- mansoor trisha issue
- mansoor vs trisha
- trisha
- trisha 25 lakhs issue
- trisha about mansoor ali khan
- trisha issue
- trisha krishnan
- trisha mansoor ali
- trisha mansoor ali khan issue
- trisha mansoor alikhan issue
- trisha mansoor issue
- trisha news